Paristamil Navigation Paristamil advert login

புதிய பாப்பரசரைச் சந்தித்த பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ!

புதிய பாப்பரசரைச் சந்தித்த பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ!

18 வைகாசி 2025 ஞாயிறு 16:44 | பார்வைகள் : 309


பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பதின்நான்காம் லியோவைச் சந்தித்துள்ளார்.

மே 18, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு ரோம் நகரின் சென்.பீட்டர்ஸ் திருச்சபையில் வைத்து இடம்பெற்றது. அங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பாப்பரசரின் கீழ் முதலாவது திருப்பலி இடம்பெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 200 வரையான பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடன் 200,000 பேர் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் ஒருவராக, பிரெஞ்சு பிரதனர் பிரான்சுவா பெய்ரூவும் கலந்துகொண்டார். யுக்ரேன் ஜனாதிபதி விளாதிமிர் செலன்ஸ்கியும் கலந்துகொண்டார். 'யுக்ரேனில் நீண்ட நெடிய அமைதி நிலவ வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்