SFR கடைகளில் தொடரும் தாக்குதல்கள்: ஐந்து பேர் கைது!

18 வைகாசி 2025 ஞாயிறு 15:52 | பார்வைகள் : 666
இல்-து-பிரான்ஸில் (Île-de-France) உள்ள தொலைபேசி கடைகளில் தொடர்ச்சியாக நடந்த ஆயுதம் கொண்ட கொள்ளைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர் எசோனில் (l’Essonne) உள்ள வணிக மையத்தில் நேற்று தோல்வியடைந்த ஒரு கொள்ளைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு Val-de-Marne மற்றும் Hauts-de-Seine பகுதிகளில் கடந்த சில வாரங்களில் பல கடைகளை குறிவைத்து கொள்ளையடித்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் மீது குழுவாக செயல்பட்ட கொள்ளை, ஆயுதம் கொண்டு திருடுதல் மற்றும் குற்றவாளிகளை கூட்டமைப்பு சேர்த்தல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த கொள்ளைக்குழுக்கள் சமூக வலைதளங்கள் வழியாக சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு "ஊபர்" <> போன்று வேலை பார்க்கின்றன.
அவர்கள் கடை ஊழியர்களை துப்பாக்கி காட்டி, கண்ணீர் புகை பயன்படுத்தி அல்லது அடைத்து வைத்து, சில தொழில்நுட்ப தொலைபேசிகளை எளிதில் கொள்ளையடிக்கின்றனர். இந்நடவடிக்கைகள் பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சமீபத்தில் நடந்த, Massy மற்றும் Étampes நகரங்களில் நடந்த SFR கடை கொள்ளை வழக்கில் ஒன்பது பேருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.