நம் சமூகம் காட்டுமிராண்டிகளை உருவாக்கிவிட்டது!

14 வைகாசி 2025 புதன் 16:03 | பார்வைகள் : 924
பிரான்ஸில் சமீபகாலமாக நடைபெறும் கடுமையான வன்முறைகள், குறிப்பாக நாந்தில் ஒரு 15 வயது சிறுமி மீது நடத்திய 57 கத்திக்குத்துத் தாக்குலும், கார்ட் மசூதியில் நடந்த கொலையும், நீதிமன்றத்திலே குழுக்களுக்கிடையேயான கைகலப்புகளும், மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து CSA நிறுவனத்தால் பல ஊடகங்களிற்காக நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில்இ 72 சதவீத மக்கள் 'சமூகம் காட்டுமிராண்டிகளை உருவாக்கும் இயந்திரமாக மாறிவிட்டது' என நம்புகிறார்கள்.
ஆளுமை மற்றும் வயது அடிப்படையில்.
பெண்கள் – 76 சதவீதம் இந்த கருத்தை ஏற்கின்றனர் (ஆண்கள் – 66சதவீதம்)
வயது – 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 76 சதவீதம் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் 25-34 வயதினர் மட்டும் 66 சதவீதம் மட்டுமே நம்புகிறார்கள்.
இந்தக் காட்டுமிரண்டித்தனங்கள் குறித்து, உள்துறை அமைச்சர் புருனோ ரத்தையோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் 'இந்தக் கொடூரங்கள், பிரான்ஸில் ஒரு நிலையான வன்முறைக்கான சூழ்நிலையை வெளிப்படுத்துகின்றன' எனவும்; 'இது அனைத்து சமூக அடுக்குகளிலும் பரவுகிறது' எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.