Paristamil Navigation Paristamil advert login

விஜய் மகன் படத்தில் பாடுவாரா ?

விஜய் மகன் படத்தில் பாடுவாரா ?

14 வைகாசி 2025 புதன் 11:56 | பார்வைகள் : 293


நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடிக்கிறார்கள். பொதுவாக வாரிசுகள் படம் இயக்கும்போது அந்த படத்தில் அவரின் அப்பா அல்லது அவரின் உறவினர்கள் அந்த படத்தில் கவுரவ வேடங்களில் நடிப்பது உண்டு.

ஆனால், ஜனநாயகன் படத்துக்கு பின் வேறு படங்களில் நடிக்கமாட்டேன் என்று விஜய் சொல்லிவிட்டார். மகன் பட விஷயத்திலும் தலையிடுவது இல்லை. ஆகவே அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது விஜய் எந்த படத்திலும் பாடமாட்டேன் என சொல்லவில்லை. அதனால், மகன் படத்தில் பாடுவாரா? அதேபோல், ஜேசன் பாட்டியான ஷோபாவும் விஜய் நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார். அவர் பேரன் படத்தில் பாடுவாரா? ஜேசன் தாத்தாவான, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் பேரன் படத்தில் நடிப்பாரா? அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருமின்றி, தனது படத்தை ஜேசன் இயக்குவாரா? அவரே ஒரு சில சீன்களின் வருவாரா என்பது கேள்வியாக இருக்கிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்