ரவி மோகன் கெனிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தாரா?

13 வைகாசி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 154
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன், கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ், அயான் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரவி மோகன் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி, தன் கணவர் ரவி மோகனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியிருந்தார்.கெனிஷாவுக்கு ரூ.10 கோடியில் வீடு வாங்கி கொடுத்த ரவி மோகன்?மேலும் இது தொடர்பாக ரவி மோகன் சில பேட்டிகளில், தனது மனைவியும், மாமியாரும் தன்னை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறி இருந்தார்.
அதே சமயம் ரவிமோகன் – ஆர்த்தி விவாகரத்திற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வந்தது. ஆனால் ரவி மோகன், கெனிஷாவிற்கும், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை அவர் தன்னுடைய தோழி மட்டுமே என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்வில் ரவி மோகன் – கெனிஷா இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்திருந்தனர்.
இதைக் கண்ட ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. 18 வருடங்களாக நான் காதலுடனும் நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் இன்று புதிதாக முளைத்தவர்களுடன் புதிய உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல் அவருடைய கண்களுக்கு காட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பு மக்களையும் கொடுப்பேன் என்று அவரது வாக்குறுதியும் பறந்து விட்டது” என்று மிக நீளமான பதிவினை வெளியிட்டு இருந்தார்.
இவ்வாறு ரவி மோகன் – ஆர்த்தி – கெனிஷா தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் ரவி மோகன், மும்பையில் கெனிஷாவுக்கு ரூ. 10 கோடியில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கெனிஷாவின் தெரபி கிளினிக்குக்காக ரூபாய் 5. கோடி கொடுத்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சிலர் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறி வருகின்றனர்.