ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த படத்தின் கதாநாயகன் இவரா ?

13 வைகாசி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 140
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அஜித்தின் திரை உலக வாழ்வில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இந்த படம் சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இதனை அடுத்து அஜித்தின் 64வது படத்தையும் இவர்தான் இயக்கப் போகிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தெலுங்கு திரையுல மாஸ் நடிகர் பாலையாவிடம் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக ‘ஏகே 64’ தாமதமானால் அதற்குள் பாலையா படத்தை ஆதிக் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பாலையா இணைந்தால் அந்த படம் ’குட் பேட் அக்லி’ போலவே மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது