ஐசரி கணேஷ் மகளுக்கு விஜய் அளிக்கும் சர்ப்ரைஸ்..!

13 வைகாசி 2025 செவ்வாய் 15:29 | பார்வைகள் : 153
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் மகள் ப்ரீத்தி திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா உட்பட திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டனர். திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், ’ஜனநாயகன்’ படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால், நடிகர் விஜய் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும், அவரது பெற்றோர் திருமண விழாவில் பங்கேற்று, விஜய்யின் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், விஜய்யின் கட்சியின் சார்பாக ஆதவ் அர்ஜுனா இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, நடிகர் விஜய் தனது வீட்டில் ஐசரி கணேசனின் மகளுக்கும், மருமகனுக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மணமக்களுக்கு சர்ப்ரைஸ்’ நிகழ்வாக இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.