ரஷ்யாவிற்கு எதிராக மிகப்பாரிய பொருளாதாரத் தடையை அறிவித்த பிரித்தானியா
11 வைகாசி 2025 ஞாயிறு 15:22 | பார்வைகள் : 2504
ரஷ்யாவிற்காக ரகசியமாக இயங்கும் எண்ணெய் கப்பல்களை (Shadow Fleet) குறிவைத்து பிரித்தானியா வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போருக்கு நிதியளிக்க ரஷ்யா பயன்படுத்தும் ரகசிய எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, பிரித்தானிய அரசு இதுவரை அறிவிக்காத அளவிற்கு மிகப் பாரிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
2024 தொடக்கம் முதல், இந்த நிழல் கப்பல்கள் $24 பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொண்டு, சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவுக்கு வருவாய் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 100-க்கும் மேற்பட்ட நிழல் எண்ணெய் கப்பல்கள் பிரித்தானியாவின் தடைகளின் கீழ் வந்துள்ளன.
இத்தகைய பழைய கப்பல்கள் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல், வழிகாட்டி தொழில்நுட்பத்தை தவிர்த்து, மாலுமி கண்காணிப்பு அமைப்புகளை முடக்கி பயணிப்பதால், ஐரோப்பிய ஆழ்கடல் கேபிள்கள், எண்ணெய் குழாய்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளுக்கு மிகப்பாரிய அபாயமாக உள்ளன.
ஓஸ்லோவில் நடைபெற்றுள்ள ஜேஈஎப் (Joint Expeditionary Force) உச்சிமாநாட்டில், இத்தகவல் முக்கியமாக முன்வைக்கப்பட்டது.
மேலும், 22 முக்கிய கடல்சார் பகுதிகள் தற்போது நார்த்வுட் (UK) கட்டுப்பாட்டு மையத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இந்த நிழல் கப்பல்களை முற்றிலும் அழிக்கவும், தேவையான அனைத்தையும் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் தயாராக உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
இக்கருத்துக்களுக்கு இணையாக, உள்நாட்டுப் பாதுகாப்பு, ராணுவ பயிற்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு ஒப்பந்தங்களிலும் பிரித்தானியா- நார்வே நாடுகள் ஒத்துழைக்க உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan