Paristamil Navigation Paristamil advert login

கட்டாய வாகன பறிமுதல்: நீதித்துறை அமைச்சரின் கடும் உத்தரவு!

கட்டாய வாகன பறிமுதல்: நீதித்துறை அமைச்சரின் கடும் உத்தரவு!

10 வைகாசி 2025 சனி 21:11 | பார்வைகள் : 581


நகர ரோடீயோக்கள் (Rodéos -உந்துருளியில் ஒற்றைச்சில்லை தூக்கிக் கொண்டு ஓடுதல் ) அதிகரித்து வரும் நிலையில், நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மன் (Gérald Darmanin), குற்றவாளிகள் தண்டனை கொடுக்கும் போதே அவர்களின் வாகனங்களை கட்டாயமாக பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இது, மீண்டும் குற்றம் செய்யும் எண்ணத்தை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும், உள்ளூர் நிர்வாகங்களுடன் இணைந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இலவசமாக பராமரிக்கவும், அவற்றை அழிக்கவோ அல்லது விற்கவோ நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு, சமீபத்தில் நடந்த உந்துருளிகளின் ஒற்றைச்சீல் ஓட்டம்  காரணமாக நிகழ்ந்த சில கடுமையான சம்பவங்களின் தொடர்ச்சியாகும். குறிப்பாக போர்தோ (Bordeaux) அருகே ஒரு நகர சபை உறுப்பினர் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தது, டிரான்சியில் (Drancy) ஒரு இளைஞர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தமை போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதாகவும், இதுவே கடுமையான சட்ட நடவடிக்கைக்கு காரணம் எனவும் ஜெரால்ட் தர்மனின் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்