Paristamil Navigation Paristamil advert login

சிறைச்சாலையில் முகமட் அம்ராவுக்கு துன்புறுத்தல்... வழக்கை இரத்துச் செய்த நீதிமன்றம்!!

சிறைச்சாலையில் முகமட் அம்ராவுக்கு துன்புறுத்தல்... வழக்கை இரத்துச் செய்த நீதிமன்றம்!!

9 வைகாசி 2025 வெள்ளி 20:22 | பார்வைகள் : 762


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமட் அம்ரா, சிறைச்சாலையில் வைத்து துன்புறுத்தப்பட்டிருந்ததாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அவரது குற்றச்சாட்டை நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

“சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கடந்த மார்ச் 24 ஆம் திகதி அன்று முகமட் அம்ராவை தூக்கி தரையில் வீசியிருந்தார்.” என அவரது வழக்கறிஞர் Benoît David நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், அதனை இரத்துச் செய்துள்ளது. 

மே 7, புதன்கிழமை மாலை இந்த வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி விசாரிக்கப்பட்டதில், “அவரை அமைதிப்படுத்தவும், அறைக்குள் செல்ல மறுத்ததாலும்” அவ்வாறு நடந்துகொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதை அடுத்து வழக்கு இரத்துச் செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்