A4 நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு..!!

9 வைகாசி 2025 வெள்ளி 19:22 | பார்வைகள் : 687
இரு சாரதிகளுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது.
Charenton-le-Pont (Val-de-Marne) நகரை ஊடறுக்கும் A4 நெடுஞ்சாலையில் நேற்று மே 8, வியாழக்கிழமை இரவு 10.30 மணி அளவில் ஒரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. இரு சாரதிகளுக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம், இறுதியில் துப்பாக்கிச்சூட்டில் முடிந்ததாகவும், காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது, துப்பாக்கி குண்டுகள் துளைத்த வாகனம் ஒன்று வீதியில் அருகே நின்றிந்ததாகவும், ஆயுததாரிகள் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிய கலிபர் வகை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், அதிஷ்ட்டவசமாக எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. Val-de-Marne மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.