பாஸ்தா தயாரிப்புகளில் உயிர் ஆபத்தை விளைவிக்கும் பக்டீரியா!

9 வைகாசி 2025 வெள்ளி 19:14 | பார்வைகள் : 1045
E.Leclerc, Carrefour, Intermarché மற்றும் Système U போன்ற பல்பொருள்அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட "Daminiani" என்ற நிறுவனத்தின் பாஸ்தா வகைகளான Tagliatelles, raviolis போன்றவவை தற்போது லிஸ்டீரியா (listeria) பக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.
இந்த எச்சரிக்கையை பிரான்ஸ் அரசாங்கத்தின் Rappel Conso இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது.
லிஸ்டீரியா பக்டீரியா மூலம் ஏற்படும் லிஸ்டீரியோஸ் (la Listériose) தொற்றால், காய்ச்சல், தலைவலி, ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். கடுமையான சந்தர்ப்பங்களில் நரம்பியல் பாதிப்புகள் (மூளை அழற்சி) ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிக ஆபத்து விளைவிக்கக்கூடியதுடன், கருவில் வளர்கின்ற குழந்தையின் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளது.