இஸ்ரேலிய பிரதமரை தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 13:06 | பார்வைகள் : 3897
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஜுவை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளார்.
உரையாடலில், காஸா பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். காஸா மக்கள் மீது கரிசனை வேண்டும் எனவும், பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் மக்ரோன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் இரு தரப்பு நியாயங்களையும் ஒரே போன்று கருத வேண்டும் எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1