அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி

15 சித்திரை 2025 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 909
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்கன்சஸ் பகுதியில் லிட்டில் ராக் அருகில் மிக பெரிய பூங்கா ஒன்று உள்ளது.
இந்த பூங்காவின் பரப்பளவு 10 ஏக்கர். பூங்காவில் பெரிய விளையாட்டு மைதானம், கூடைப்பந்து ஆடுகளம் உள்ளது.
பூங்காவில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான பேர் இருந்த நிலையில் திடீரென நடந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
9 பேர் படுகாயம் அடைந்ததுடன் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு எதனால் நடைபெற்றது? யார் துப்பாக்கியால் சுட்டது போன்ற விவரங்களைபொலிஸார் வெளியிட மறுத்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், முழு விவரங்கள் பின்னரே தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.