பிரான்ஸ் தூதரகத்தை வெளியேற்ற அல்ஜீரிய அரசு உத்தரவு!! தொடரும் பதட்டம்....
14 சித்திரை 2025 திங்கள் 10:22 | பார்வைகள் : 12019
அல்ஜீரியாவில் பணியாற்றும் பிரான்ஸ் தூதரகத்திலுள்ள 12 அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு அல்ஜீரிய அரசு கோரியுள்ளது. இதற்கு காரணம், அல்ஜீரிய அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர் அமீர் பூகோர்ஸ் (Amir DZ) கடத்தப்பட்ட வழக்கில் மூன்று அல்ஜீரியர்கள் கைது செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று அல்ஜீரியர்கள் மீதும் தீவிரவாத குற்றச்சாட்டுகளும், குற்றவாளிகள் கூட்டாக செயல்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிக காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நடவடிக்கையை அல்ஜீரிய அரசு கடுமையாக கண்டித்து, பிரான்ஸ் தூதரகத்திலுள்ள 12 அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு அல்ஜீரிய அரசு தெரிவித்து உள்ளது.
இதற்கு பிரான்ஸ் அரசு தனது பங்கிற்கு "அல்ஜீரிய அரசு பிரான்சு தூதரகத்தின் வெளியேற்ற உத்தரவை நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் தக்க பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் கூறியுள்ளது.
கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மீண்டும் தொடங்க முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதிய சம்பவம், அந்த உறவுகளில் மீண்டும் விரிசலை உருவாக்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan