ஈரான் துறைமுகத்தில் பேரழிவு வெடிவிபத்து- பலி எண்ணிக்கை உயர்வு

27 சித்திரை 2025 ஞாயிறு 14:58 | பார்வைகள் : 305
ஈரானின் மிகப்பெரிய வணிகத் துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானின் மிகப்பெரிய வணிகத் துறைமுகத்தில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.