Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மோசமான கிண்டலுக்கு ஆளான மெஸ்ஸி!

கனடாவில் மோசமான கிண்டலுக்கு ஆளான மெஸ்ஸி!

27 சித்திரை 2025 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 245


வான்கூவரில் ரசிகர்களால் கேலிக்குள்ளான லியோனல் மெஸ்ஸி, பதிலுக்கு அவர்களை நோக்கி எச்சரிக்கை விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

CONCACAF சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டி (Leg 1) கனடாவின் BC Place மைதானத்தில் நடந்தது.

இதில் மெஸ்ஸியின் இன்டெர் மியாமி அணி 0-2 என்ற கோல் கணக்கில் வான்கூவர் அணியிடம் தோல்வியுற்றது.

ஆடுகளத்தை விட்டு லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வெளியேறியபோது, உள்ளூர் ரசிகர்கள் சிலர் அவரை கேலி செய்தனர்.

சில ரசிகர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐகானிக் எண் 7ஐத் தாங்கிய போர்த்துக்கல் ஜெர்சியை உயர்த்தி, மெஸ்ஸியை கிண்டல் செய்தனர்.

பதிலுக்கு மெஸ்ஸி, ரசிகர்களை உற்றுப் பார்த்து ஒரு எச்சரிக்கை விடுத்தார். அதாவது, கவனமாக இருங்கள், இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது என்று அவர் தீர்க்கமான இரண்டாவது லெக் ஆட்டத்தை குறிப்பிட்டார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்