கருத்துக் கணிப்பை புறந்தள்ளிய தொழிற்சங்கங்கள்!! பணிப்புறக்கணிப்பு உறுதி!!

27 சித்திரை 2025 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 515
CSA செயத கருத்துக் கணிப்புகளை தேவையற்ற விடயம் என்று புறந்தள்ளிய தொழிற்சங்கங்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நிச்சயம் என உறுதிப்படுத்தி
உள்ளனர்.
மே மாதத்தின் விடுமுறைநாட்களுடன் இணைந்து வரும் வார இறுதிகளில் (pont) SNCF ஏற்கனவே அறிவித்துள்ள பணிப்புறக்கணிப்பைத் தடை செய்ய வேண்டுமா என CSA ஊடகங்களிற்காக ஒரு கருத்துக் கணிப்பைச் செய்துள்ளது.
இன்று நடந்த கருத்துக்கணிப்பில் பணிப்புறக்கணிப்பைத் தடைசெய்வதற்கு ஆதரவாக 65 சதசவீதமானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
35 சதவீதமானோர் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தக் கருத்துக் கணிப்புகள் ஒன்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பணிப்புறக்கணிப்பைப் பாதிக்கப்போவதில்லை என்பது தான் யதார்த்தம்.
அவர்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்பட்டால் மட்டுமே இது நிறுத்தப்படும்.