Paristamil Navigation Paristamil advert login

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனில் குடியேற காரணம் இதுதான்...

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனில் குடியேற காரணம் இதுதான்...

26 சித்திரை 2025 சனி 14:59 | பார்வைகள் : 123


விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி, லண்டனில் குடியேறியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு, இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு, அகாய், வாமிகா என 2 குழந்தைகள் உண்டு.

கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில், லண்டனுக்கு குடிபெயர்ந்த இந்த தம்பதிகள் தங்களது பணிகளுக்காக மட்டும் இந்தியாவிற்கு வருகின்றனர்.

தற்போது விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் தங்கி உள்ளார். விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி, பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனில் குடியேறியதற்கான உண்மையான காரணத்தை, மாதுரி தீக்‌ஷித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே தெரிவித்துள்ளார்.

யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவுடன் பாட்கேஸ்ட் ஒன்றில் பேசிய அவர், "அவர்களால் தங்கள் வெற்றியை இங்கே அனுபவிக்க முடியவில்லை. இங்கு அவர்கள் எதை செய்தாலும் அது அனைவரின் கவனத்தையும் பெறும்.

எந்த கவனமும் இல்லாமல் சாதாரணமாக தங்களது குழந்தைகளை வளர்க்க விரும்புகிறார்கள் இதனால் அந்த தம்பதி லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்" என தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்