சச்சின் மகளுடன் காதலா? மனம் திறந்த சுப்மன் கில்

26 சித்திரை 2025 சனி 14:56 | பார்வைகள் : 116
டேட்டிங் உள்ளதாக வெளியான தகவலுக்கு சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.
சுப்மன் கில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், குஜராத் அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரின் தலைமையிலான குஜராத் அணி 8 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கானுடன் உள்ளிட்டோருடன் காதலில் இருந்ததாக தகவல் வெளியானது.
சமீபத்தில், சுப்மன் கில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நான் தனிமையில் இருந்து வருகிறேன். ஆனால் என்னை பலரோடு தொடர்பு படுத்தி யூகங்கள் மற்றும் வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் பல ஊகங்களும் வதந்திகளும் என்னை வெவ்வேறு நபர்களுடன் இணைக்கின்றன. ஆனால், அது மிகவும் அபத்தமானது. ஏனென்றால் என்னுடன் தொடர்புபடுத்தும் நபர்களை நான் நேரில் சந்தித்ததோ, பேசியதோ கூட கிடையாது.
எனது தொழில்முறை வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். வருடத்தில் 300 நாட்கள் எங்காவது பயணம் செய்கிறோம், எனவே ஒருவருடன் உறவில் இருக்க எனக்கு நேரமில்லை" என தெரிவித்துள்ளார்.