Paristamil Navigation Paristamil advert login

டி20யில் மீண்டும் சாதனை படைத்த விராட் கோஹ்லி

டி20யில் மீண்டும் சாதனை படைத்த விராட் கோஹ்லி

25 சித்திரை 2025 வெள்ளி 09:42 | பார்வைகள் : 124


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி இமாலய சாதனை படைத்தார்.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் விராட் கோஹ்லி (Virat Kohli) 42 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் ஒரே மைதானத்தில் அதிக அரைசதங்கள் அடித்த அலெக்ஸ் ஹேல்ஸின் (இங்கிலாந்து) சாதனையை முறியடித்தார்.

அதேபோல், டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் அதிகமுறை 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் கோஹ்லி படைத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானின் பாபர் அசாம் 61 முறை முதல் இன்னிங்சில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தார்.

முதல் இன்னிங்சில் 50+ ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
•    விராட் கோஹ்லி - 62 முறை
•    பாபர் அசாம் - 61 முறை
•    கிறிஸ் கெய்ல் - 57 முறை
•    டேவிட் வார்னர் - 55 முறை
•    பட்லர்/பாப் டு பிளெஸ்ஸிஸ் - 52 முறை     

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்