பாப்பரசர் மிகவும் கருணை வாய்ந்தவர் - உள்துறை அமைச்சர்!

23 சித்திரை 2025 புதன் 08:42 | பார்வைகள் : 484
பாப்பரசர் பிரோன்சுவா பற்றி மிகவும் நெகிழ்ச்சியான கருத்துக்களை உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெயூ தெரிவித்துள்ளார்.
«நான் அவர் கோர்ஸ் தீவிற்கு வருகை தந்தபோது நான் அவரைச் சந்தித்தேன். அவரது மகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் அவரது கருணை என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது»
«அவரின் வருகையின் போது வதந்திகளும் கேலிச்சித்திரங்களும் வரையப்பட்டிருந்தாலும், அவரது கருணை அவையனைத்தையும் தூக்கியெறிந்து விட்டன»
என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.