SNCF - பாரிய திருத்த வேலை - தடைப்படும் முக்கிய தொடருந்துகள்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 08:52 | பார்வைகள் : 1344
பரிசிற்கும் ஓர்லியோனிற்கும் இடையில் பிரான்சின் தேசியத் தொடருந்துச் சேவையான ளுNஊகு பெரும் திருத்த வேலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று ஆரம்பிக்கும் இந்தத் திருத்த வேலைகள் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்.
இந்த வழித்தடத்தில் 70 கிலோமீற்றர் நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் மற்றும், கடக்கும் பாலங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட உள்ளன.
இதனால் பரிசிலிருந்து ஓர்லியோன், லிமோஜ் ஊடாக துலூஸ் செல்லும் தொடருந்துகள் பெரும் இடையூற்றிற்கு உள்ளாகும் என SNCF அறிவித்துள்ளது.