Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க எல்லைக்கு அருகே காணாமல் போன மூவர்

அமெரிக்க எல்லைக்கு அருகே காணாமல் போன மூவர்

18 சித்திரை 2025 வெள்ளி 16:12 | பார்வைகள் : 356


அமெரிக்க எல்லையை கடந்து கனடாவுக்குள் அனுமதியின்றி வர முயன்றபோது காணாமல் போன பெண் மற்றும் இரண்டு சிறிய குழந்தைகள் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த மூவரும் காட்டுப்பகுதியில் இல்லாமல் இருக்க வாய்ப்பு கியூபெக் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன மூவரும் "ஓர் வாகனத்தில் அந்த இடத்தை விட்டு முன்னதாகவே வெளியேறி இருக்கக்கூடும்" என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், தேடுதல் நடவடிக்கையை தற்காலிகமாக நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,இந்தக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் — இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் — புதன்கிழமை இரவு கொட்மான்செஸ்டர் Godmanchester, Quebec அருகே அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடக்கும் போது கைது செய்யப்பட்டனர்.

கொட்மான்செஸ்டர் Godmanchester என்பது நியூயார்க் மாநில எல்லைக்கு அருகில் உள்ள சிறிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்