மின்சார விரயத்தை தடுக்க "Heures Creuses" இல் மாற்றம்!

18 சித்திரை 2025 வெள்ளி 15:16 | பார்வைகள் : 774
பிரான்ஸ் தற்போது தன்னுடைய தேவையைவிட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. மின்சாரம் சேமிக்க முடியாததால், உற்பத்தியாளர்கள் வீணடிக்கப்படும் மின்சாரத்திற்கும் பணம் செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளனர்.
2024 இல் மட்டும் ஒரு மணித்தியாலத்திற்கு 88.3 டெராவாட் (térawatt/heure) மின்சாரம் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள் 80 மில்லியன் யூரோ வரை இழந்துள்ளனர்.
இந்த அதிக உற்பத்திக்கு காரணமாக, மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த தொடங்கியதோடு, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதிக உற்பத்தியை சமாளிக்க, "heures creuses " இரவுக்கு பதிலாக மதியம் நேரத்துக்கு மாற்ற புதிய திட்டத்தை பரிசீலிக்கிறது. RTE, தேவையைவிட அதிகமான உற்பத்தியை கட்டுப்படுத்த, சில நேரங்களில் காற்றாலை உற்பத்தியை நிறுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.