Paristamil Navigation Paristamil advert login

“சமாதானம் இல்லை என்றால் வேறு வழி பார்ப்போம்” : உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை!!

“சமாதானம் இல்லை என்றால் வேறு வழி பார்ப்போம்” : உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை!!

18 சித்திரை 2025 வெள்ளி 09:22 | பார்வைகள் : 794


உக்ரைனில் சமாதானம் சாத்தியமா என்பதை எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்க வேண்டும்; இல்லையெனில் வேறு வழியை தேட வேண்டிய அவசியம் உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பரிஸை விட்டு அமெரிக்கா திரும்பும் முன் கூறி உள்ளார்.

மேலும் "அமெரிக்காவுக்கு கவனம் செலுத்த முதன்மையான வேறு விடயங்கள் உள்ளன" என்றும், இந்த போரில் பல நாட்கள், மாதங்கள் நேரத்தை செலவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று அமெரிக்கா, உக்ரைன், பிரான்ஸ், பிரிட்டன், மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பரிஸில் ஒன்றிணைந்து, உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர்நிறுத்தத்தை பற்றி பேச்சு வார்த்தை நடத்தி இருந்தமை நாம் அறிந்ததே. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் யோசனைகள் பயனுள்ளதாக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறி உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்