Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் அதிகமாகும் அகதித்தஞ்சம் - ஏன்?

பிரான்சில் அதிகமாகும் அகதித்தஞ்சம் - ஏன்?

17 சித்திரை 2025 வியாழன் 10:39 | பார்வைகள் : 1136


பிரான்சில் அகதித்தஞ்சக் கோரிக்கைகள் அதிகமாகியே உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அகதித்தஞ்சக் கோரிக்கைகளில் பிரான்ஸ் உச்சத்தில் உள்ளது.
 
ஐரோப்பிய புள்ளிவிபரமான EUROSTAT, கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் பிரான்சில் 13.065 அகதித்தஞ்சக் கோரிக்கைகள்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதே மாத்தில் ஐரோப்பாவில், ஸ்பெயினில் 12.975 அகதித்தஞ்சக் கோரிக்கைகளும், ஜேர்மனியில் 12.775 அகதித்தஞ்சக் கோரிக்கைகளும், பெல்ஜியத்தில் 3.060 அகதித்தஞ்சக் கோரிக்கைகளும் பதிவாகி உள்ளன.

தொடர் தாக்குதல்களால், ஜேர்மனி தனது எல்லைகளைப் பலப்படுத்தியதால், அகதித் தஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்து, அவை பிரான்சை நோக்கி வருகின்றன.

அத்துடன் பிரான்சில் அகதிதஞ்சக் கோரிக்கையாளர்களிற்கு, ஐரோப்பாவிலேயே அதிக உதவிப்பணம் வழங்கப்படுகின்றது. 

அவர்களிற்கான வதிவிட உரிமை இல்லாவிட்டாலும் பிரான்சில் அவர்களிற்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். சமூக உதவிகளும் உறுதி செய்யப்படுவதால் அதிக அகதித்தஞ்சக் கோரிக்கைகள் பிரான்சில் அதிகரித்து வருவதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.

அகதிதஞ்சக் கோரிக்கையாளர்களிற்கு, மாதாந்த உதவித் தொகையாக பிரான்சில் 426 யூரோக்களும், ஜேர்மனியில் 367 யூரோக்களும், ஒஸ்ரியாவில் 365 யூரோக்களும் வழங்கப்படுகின்றன.

இதுவே பிரான்சை நோக்கி அதிகமானோர் அகதித்தஞ்சக் கோரிக்கை பதிவுசெய்யக் காரணம் என, Fondapol ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்