வில்பந்த் சிறையிலும் தாக்குதல்!!

17 சித்திரை 2025 வியாழன் 09:46 | பார்வைகள் : 647
நேற்று நள்ளிரவிற்கும் இன்று காலைக்கும் இடையில் மேலும் பல சிறைத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
முக்கியமா இல்-து-பிரானசின் சிறைகள் தாக்கப்பட்டுள்ளன.
வில்பந்த் மற்றும் நோந்தேர் சிறைச்சாலைகள் குறிவைத்தத் தாக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், நீதியமைச்சர் என இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கண்டித்துக் கொண்டிருக்கும் பொழுது, தாக்குதல்கள் மட்டும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
தற்போது சிறைக்காவலர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.
அமியன் (Amiens) சிறையதிகாரி ஒருவரின் சிற்றுந்தச் சக்கரங்கள் குத்திக்கிழிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வீட்டின் தபால் பெட்டியிலும் எச்சரிக்கை வாசகங்கள் எழுத்தப்பட்டும் இருந்தன எனத் தெரிவிக்கபட்டுள்ளது.