குற்றவாளிகளை பிரான்சுக்கு வெளியே சிறைவைக்க பொதுமக்கள் ஆதரவு!!

16 சித்திரை 2025 புதன் 09:00 | பார்வைகள் : 1235
வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளை சிறைவைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பிரெஞ்சு மக்களில் பெரும்பாலானோர், குற்றவாளிகளை பிரான்சுக்கு வெளியே சிறைவைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'ஆபத்தான குற்றவாளிகள்' என கருதப்படுபவர்களை நாட்டுக்கு வெளியே, பல மைல் தூரத்தில் தனித்தீவில் சிறைப்பது சிறந்தது என பத்தில் ஆறு பேர் (61% சதவீதமானவர்கள்) தெரிவித்துள்ளனர். பிரான்சுக்கு சொந்தமான பல்வேறு தீவுகளில் ஒன்றில் அவர்கள் சிறைவைக்கப்படுதல் வேண்டும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக கனேடிய தீவுக்கூட்டங்களுக்கு அருகே உள்ள Saint-Pierre-et-Miquelon தீவில் அவர்களை சிறைவைக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Cnews, Europe 1 மற்றும் JDD போன்ற ஊடகங்களுக்காக CSA நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது.