பிரான்சின் சகல எல்லைகளும் அதி உச்ச பாதுகாப்பில். François Bayrou

11 பங்குனி 2025 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 6501
காவல்துறையினர், விசேட 'Gendarmes' காவல்துறையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவர்களுடன் இராணுவத்தினர் இணைந்து நாட்டின் எல்லைப் பகுதியில் அதி உச்ச பாதுகாப்பில் இறங்கியுள்ளனர் என தெரியவருகிறது.
சட்ட விரோதமாக தங்களின் நாடுகளுக்குள் நுழையும் குடியேற்ற வாசிகள் மற்றும் குற்றவாளிகளைத் தடுக்க ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் எல்லைகளில் கடுமையான பரிசோதனைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சட்டவிரோத குடியேற்றவாசிகளும் குற்றவாளிகளும் பிரான்சுக்குள் நுழைய அதிகமாக எத்தனித்து வருவதை அடுத்து கடுமையான பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் François Bayrou அவர்கள் கடந்த பெப்ரவரி 26ம் திகதி இதற்கான ஆணையை பிறப்பித்துள்ள நிலையில் இப்போது உள்துறை அமைச்சகம் இதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரான்சில் ஏற்கனவே பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற கூடும் என்ற அச்சநிலை நிலவிவரும் நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3