ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜிக்கு குறி ! அமலாக்கத்துறை சோதனை
6 பங்குனி 2025 வியாழன் 17:56 | பார்வைகள் : 6533
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில், கேரள மாநிலத்திலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.
கரூர் கோதை நகர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் கேரளா, தெலுங்கானா மாநில த்திய பாதுகாப்பு காவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூர் 80 அடி சாலை பகுதி அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
ஜெகத்ரட்சகன்
சென்னையிலும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சென்னை பாண்டிபஜாரில் உள்ள நிறுவனத்திலும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
12 இடங்களில்!
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் எஸ்.டி.பி.ஐ., அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan