இலங்கையில் பரீட்சை எழுத சென்ற 2 பரீட்சார்த்திகள் மாயம்
27 பங்குனி 2025 வியாழன் 14:55 | பார்வைகள் : 3730
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் 26 ஆம் திகதி பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறினர்.
தேர்வு எழுதச் சென்றிருந்த இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan