நியூ மெக்சிகோவில் திடீர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி 15 பேர் படுகாயம்
23 பங்குனி 2025 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 4554
நியூ மெக்சிகோவில் நடந்த கார் கண்காட்சியில் பயங்கர துப்பாக்கிச்சூடு அரங்கேறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை இரவு லாஸ் க்ரூஸ் யங் பூங்காவில் 200 பேர் கலந்து கொண்ட அங்கீகரிக்கப்படாத கார் கண்காட்சியில் திடீர் துப்பாக்கி சூடு வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் பதினைந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததும், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் விரைந்து வந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் வயது 16 முதல் 36 வரை இருந்த நிலையில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
லாஸ் க்ரூஸ் காவல்துறை, நியூ மெக்சிகோ மாநில காவல்துறை, டோனா அனா கவுண்டி ஷெரிப் அலுவலகம், கூட்டாட்சி புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகம் (ATF) ஆகிய பல அமைப்புகளின் உதவியுடன் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமான சந்தேக நபர்களை அடையாளம் காண உதவும் வீடியோ காட்சிகள் அல்லது தகவல்களை வழங்க நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முன்வர வேண்டும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் தீவிரமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan