நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 25 திரைப்பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு திரையுலகில் பரபரப்பு..!
20 பங்குனி 2025 வியாழன் 15:46 | பார்வைகள் : 3059
நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை நிதி அகர்வால் உள்பட 25 முன்னணி நடிகர்கள் மீது தெலுங்கானா மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பனீந்திர ஷர்மா, சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதற்காக தெலுங்கு நடிகர்களும் சமூக வலைதள பிரபலங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், சினிமா மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் விளம்பரப்படுத்திய சூதாட்ட செயலிகளில் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்ததால், பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், தானும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இவ்வாறு விதிகளை மீறி சூதாட்டங்களை விளம்பரப்படுத்தியதை அடுத்து, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது புகாரில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ரானா டகுபதி, நடிகை நிதி அகர்வால் உள்பட 25 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், போலீசார் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கு திரைத்துறையின் முன்னணி 25 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது திரையுலகிலும் ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan