அகதிகள் வெளியேற்றத்தின் போது வன்முறை.. 46 பேர் கைது - 9 பேர் காயம்!!
19 பங்குனி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 19284
Gaîté Lyrique கலாச்சார அரங்கில் அத்துமீறி நுழைந்து மாதக்கணக்கில் தங்கியுள்ள அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை நேற்று மார்ச் 18, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. அதன்போது காவல்துறையினருக்கும் - அகதிகளுக்குமிடையே மோதல் வெடித்தது.
Gaîté Lyrique இல் இருந்து வெளியேற மாட்டோம் என அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டாயப்படுத்தி வாகனங்களில் ஏற்ற முற்பட்ட காவல்துறையினருக்கும் அகதிகளுக்குமிடையே மோதல் வெடித்தது.
இதில் 46 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஏழு அகதிகளும் இரண்டு காவல்துறையினருமாவர்.
இத்தகவலை காவல்துறை தலைமையதிகாரி Laurent Nunez ஊடகங்களுக்கு தெரிவித்தார். பாதுகாப்பில்லாத, நிலையான தங்குமிடமாகவும் இல்லாத ஒரு அரங்கில் அகதிகளை தங்க அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan