Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரான்சின் முதல் ஐந்து நட்சத்திர விடுதி!!

பிரான்சின் முதல் ஐந்து நட்சத்திர விடுதி!!

21 கார்த்திகை 2017 செவ்வாய் 16:32 | பார்வைகள் : 24072


உலகின் தலைசிறந்த சுற்றுலா நாடான பிரான்சில் உள்ள விடுதிகள் குறித்து தெரிந்து கொள்ள பல சுவாரஷ்யமான செய்திகள் உண்டு. இன்று பரிஸ் உட்பட நாடு முழுவதும் பல நட்சத்திர விடுதிகள் இருந்தாலும்.. பிரான்சின் முதல் ஐந்து நட்சத்திர விடுதி எது தெரியுமா..??
 
அதை தெரிந்துகொள்வதற்கு முன்னர், மேலும் பல புள்ளி விபரங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 2013 ஆம் ஆண்டில் பரிஸ் நகரம் மிக 'பிஸி'யான சுற்றுலா நகரமாகும். அப்போது எடுக்கப்பட்ட கணக்கின் படி, பரிசில் மட்டும் 1,570 விடுதிகள் இருந்தன. 70,034 அறைகள் இந்த விடுதிகளில் இருந்தன. இவற்றில் 55 விடுதிகள் 'ஐந்து நட்சத்திர' விடுதியாக இருந்தது. 
 
இந்த விடுதிகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. மிக ஆடம்பரமான வசதிகளை உள்ளடக்கிய விடுதிகளாக இவை உள்ளன. குறிப்பாக இவை சோம்ப்ஸ்-எலிசே பகுதியை சுற்றியே உள்ளன. 
 
பிரான்சின் முதல் நட்சத்திர விடுதியாக, பெரும் ஆடம்பரத்துடன் கட்டப்பட்ட விடுதி Le Meurice ஆகும். பல்வேறு கிளைக் கதைகள் வரலாறுகள் கொண்ட இந்த விடுதி, 1817 ஆம் ஆண்டு (சரியாக 200 வருடங்கள் முன்பு) கட்டப்பட்டது. இது பிரான்சின் முதல் நட்சத்திர விடுதி. 
 
அதேபோல், Hôtel Ritz,  1898 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இளவரசி டயானா, பரிஸ் வந்திருந்த போது இந்த விடுதியில் தங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 
 
தற்போது பிரபல சுற்றுலா தங்குமிட நிறுவனமான Airbnb, பிரான்சில் 65,000 வீடுகளை தங்கள் சுற்றுலா தங்குமிடமாக பதிந்துள்ளது. இதற்காக பரிஸ் சுற்றுலா துறைக்கு வரி செலுத்துக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் 7.3 மில்லியன் யூரோக்கள் வரியாக செலுத்தியுள்ளது. 
 
இன்று அனைத்து விடுதிகளும் இணையத்தை மாத்திரமே குறிவைத்து செயற்படுகிறது. காரணம் நீங்கள் அறியாததல்ல...!!

வர்த்தக‌ விளம்பரங்கள்