கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நயன்தாரா ...!
8 மாசி 2025 சனி 12:29 | பார்வைகள் : 6058
நயன்தாராவின் அடுத்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படங்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி கொண்டிருந்தாலும், சமீப காலமாக அவரது படங்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை பெறவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அவருடைய அடுத்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும், அந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அந்த படம் தான் ’மூக்குத்தி அம்மன் 2’.
ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதேபோல், அவர் 12 வருடங்களுக்கு முன் இயக்கிய ’மதகஜராஜா’ திரைப்படமும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.அந்த வகையில், ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan