Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பாதுகாவலரின் தெருவில் திருட்டு! - வரலாற்றில் இருந்து..!!

பாதுகாவலரின் தெருவில் திருட்டு! - வரலாற்றில் இருந்து..!!

8 மார்கழி 2017 வெள்ளி 12:30 | பார்வைகள் : 23196


கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பரிசில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மொடலுமான Kim Kardashian இடம் இருந்து 9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது. 
 
பரிசில் இடம்பெற்ற 'ஃபஷன் ஷோ' ஒன்றில் கலந்துகொள்ளவே அவர் வந்திருந்தார். ஒக்டோபர் 3 ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு காவல்துறையினர் வேடமணிந்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், Kim Kardashian இன் கைகளை கட்டி குளியலறைக்குள் இருக்கச் சொல்லிவிட்டு, நகைகளை திருடிக்கொண்டு ஓடிவிட்டார்கள். 
 
பின்னர், விசாரணைகள் இடம்பெற்று திருடர்களும் கைது செய்யப்பட்டு நகைகளும் மீட்கப்பட்டது. இந்த செய்தியினை நீங்கள் முன்னதாகவே அறிந்திருப்பீர்கள். Kim Kardashian பரிசில் Rue Tronchet இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். அது ஒரு புகழ்பெற்ற வீதி என்பது தெரியுமா??
 
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில், இரு பக்கமும் மரங்கள் நிறைந்து அமைதியாக காட்சியளிக்கும் இந்த வீதியின் பெயர் Rue Tronchet. மிக ஆடம்பர விடுதிகள் மாத்திரமே கொண்ட இந்த வீதி 400 மீட்டர்கள் நீளம் மாத்திரமே கொண்டது. 
 
வீதியின் ஒரு முனை Place de la Madeleine உம், மறுமுனை Boulevard Haussmann உம் கொண்டது. அதை விட்டுவிடலாம். இந்த Rue Tronchet எனும் பெயர் எப்படி வந்தது தெரியுமா? 
 
François Denis Tronchet என்பவரது நினைவாக தான் இந்த வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் யார் என்றால்... பதினாறாம் லூயி மன்னனின் மிக முக்கிய மெய் பாதுகாவலர். பிரெஞ்சு புரட்சியின் போது இவர் முக்கிய கடமையாற்றினார். அதன் நினைவாகவே இந்த பெயர் இந்த வீதிக்கு சூட்டப்பட்டுள்ளது. 
 
அப்படிப்பட்ட வீரவரலாறு கொண்ட இந்த வீதியில் உள்ள உணவகத்தில் தான் Kim Kardashian  இடம் இருந்து 9 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்