Paristamil Navigation Paristamil advert login

உலகின் அழிவுக்கு காரணமான மூன்று விடயங்கள் - நிபுணர்கள் எச்சரிக்கை

உலகின் அழிவுக்கு காரணமான மூன்று விடயங்கள் - நிபுணர்கள் எச்சரிக்கை

6 மாசி 2025 வியாழன் 14:44 | பார்வைகள் : 3556


சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு புதிய வைரஸால், அடுத்த கொள்ளை நோய் உருவாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

மூன்று விடயங்கள் உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார் குயின்ஸ்லாந்து பல்கலை ஆய்வாளரான Dr Rhys Parry.

அவை, ஒன்று அணு ஆயுதப்போர், அடுத்தது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், மூன்றாவது, உலகை பாதிக்கவிருக்கும் ஒரு கொள்ளை நோய் என்கிறார் Dr Parry.


இப்போது, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் சிலர், அமெரிக்காவில் இதுவரை இல்லாத புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அதன் பெயர் கேம்ப் ஹில் வைரஸ் அல்லது CHV (Camp Hill virus). சமீபத்தில் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் மற்றும் ஹேண்ட்ரா வைரஸ் ஆகியவற்றின் குடும்பமான ஹெனிப்பா வைரஸ் (henipavirus) குடும்பத்தைச் சேர்ந்தது இந்த கேம்ப் ஹில் வைரஸ்.

இந்த ஹெனிப்பா வைரஸ்களால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாகும்.

ஆகவே, அமெரிக்காவில் இந்த கேம்ப் ஹில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அது கொரோனாவைரஸைப்போல எதிர்காலத்தில் ஒரு கொள்ளை நோயை உருவாக்கலாம் என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் அல்லது மலம் மூலம் அது மனிதர்களுக்கும் பரவக்கூடும்.

இந்த வைரஸும் மரபணு மாற்றம் பெற்று மனிதர்களுக்கு பரவக்கூடும் என்கிறார் Dr David Dyjack என்னும் அறிவியலாளர்.

இந்த கேம்ப் ஹில் வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அவருக்கு தண்டுவடம் மற்றும் மூளை பாதிப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சேதம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

தற்போது அமெரிக்காவில் இந்த கேம்ப் ஹில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்