ஒஷாவாவில் 13 வயது சிறுவன் கைது

3 மாசி 2025 திங்கள் 08:35 | பார்வைகள் : 5938
ஒஷாவாவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக அச்சுறுத்தல் விடுத்த 13 வயதான சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டர்ஹம் பிராந்திய போலீஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட போவதாக சமூக ஊடகங்கள் மூலம் குறித்த சிறுவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பியே எலியோட் ட்ரூடோ பொது பாடசாலையில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1