தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
10 மாசி 2018 சனி 10:30 | பார்வைகள் : 21947
1780 ஆம் ஆண்டின் மோசமான வரலாற்றினை மெல்ல மெல்ல அந்த தீவும், தீவின் மக்களும் மறக்கலாயினர்.
காலங்கள் ஓட, கடந்த கால ஓலங்களை மறந்து.. புதிய தலைமுறைகள் பிறப்பெடுத்தன. பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டு, போக்குவரத்துக்கள், வீதி அபிவிருத்திகள் என மெல்ல மெல்ல தீவு ஒரு படிமத்துக்கு உருமாறியது. உலகம் 20 ஆம் நூற்றாண்டை சந்தித்தது...
1900 வருடங்களிலெல்லாம், இந்த தீவின் மிக 'பிஸி'யான நகரம் Saint-Pierre ஆகும். தொழில் பேட்டைகள், உற்பத்திகள், கடைகள், சலூன்கள், கப்பலில் வந்து இறங்கும் மது போத்தல்கள் என கூட்டம் அலைமோதும் நகரமாக இருந்தது. இதனாலேயே தீவின் 90 விழுக்காடு மக்கள் இங்கு வசித்தனர். 'கரீபியனின் பரிஸ்' என அப்போது இது அழைக்கப்பட்டது. அத்தனை ஜனத்திரள் கொண்டது இந்த நகரம்.
இந்த தீவுக்கு மேலும் அழகு சேர்ந்தது இங்கிருந்த ஒரு மலையான Mount Pelée.
கடற்கரையும், அதை ஒட்டிய மலையும்.. பச்சை பசேல் என அதன் தோற்றமும்.. தீவினை மிக அழகாக மாற்றியது. அங்கு வசித்த மக்களின் பொழுதுபோக்காக இந்த கடற்கரை இருந்தது.
Mount Pelée. அதாவது 'உரிக்கப்பட்ட மலை' என அர்த்தம். ஏன் என்றால்... இந்த பச்சை மலையின் மேல் மற்றுமொரு மலை உள்ளது. அது மரங்கள் அற்று தனி பாறையாக இருந்தது. தலையில் 'நங்' என கொட்டினால், குட்டியாக வீங்குமே.. அது போல்... இதனாலேயே இந்த மலைக்கு Mount Pelée என பெயர் வந்தது.
யாரும் கவனிக்காத வேளையில், 1900 ஆம் ஆண்டின் ஒரு நாளில்.. இந்த மலையின் உச்சியில் இருந்து வெள்ளை வெளீர் என ஒரு புகை மண்டலம் புறப்பட்டு அடங்கியது...
-நாளை.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan