Melun : காவல்துறையினரின் அதிரடியில் 14 பேர் கைது.. €150,000 பறிமுதல்..!!
30 தை 2025 வியாழன் 11:25 | பார்வைகள் : 9496
போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடியான சுற்றிவளைப்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். €150,000 பணமும், பல்வேறு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை Melun (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. BRI மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் என மொத்தமாக 200 பேர் வரை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்கள், வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக rue Claude-Bernard வீதியில் உள்ள மூன்று கட்டிடங்கள் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்டது.
இந்த நடவடிக்கையின் முடிவில் 21 தொடக்கம் 49 வரை வயதுடைய 14 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கிலோ கொக்கைன், 5.5 கிலோ கஞ்சா, துப்பாக்கிகள், துப்பாக்கிச் சன்னங்கள், 150,000 யூரோக்கள் பணம் போன்றவை மீட்கப்பட்டன. இரண்டு வாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வருடத்தில் குறித்த மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய நடவடிக்கை இது என காவல்துறையினர் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan