Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

CIRE TRUDON - மெழுகுவர்த்தி தயாரிப்பின் முன்னோடி!!

CIRE TRUDON - மெழுகுவர்த்தி தயாரிப்பின் முன்னோடி!!

7 பங்குனி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 21941


மூலை முடுக்கெல்லாம் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் போது, மெழுவர்த்தியின் தேவை சரிந்ததா... என்றால் இல்லை.. வெளிச்சத்துக்காக பயன்படுத்திய மெழுவர்த்தி இப்போது பல்வேறு விதங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  
 
பிரான்சின் மிக பழமையான மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் Cire Trudon நிறுவனத்தினர் ஆவர். இன்று நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டும், அண்டைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வரும் இந்த நிறுவன மெழுவர்த்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 
 
ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் தனிக்கதை.. கிளைக்கதை உண்டு. நம்புவீர்களா... இந்த நிறுவனத்தின் முதல் மெழுவர்த்தி தயாரிக்கப்பட்டது 1643 ஆம் ஆண்டு. பரிசில் rue Saint Honoré இல் உள்ள ஒரு வீட்டில் தனி நபர் ஒருவரால் ஆரம்பிக்கபட்ட இந்த இந்த நிறுவனம்... இன்று ஐந்து தலைமுறைகளை தாண்டிவிட்டது. 
 
18 ஆம் நூற்றாண்டில் மெழுவர்த்தியின் தேவை மிக அதிகமாக இருந்தது. தீப்பந்தங்களை இலகுவாக 'ரீப்ளேஸ்' செய்தது மெழுவர்த்தி. அப்போது Cire Trudon தயாரிப்புக்கள் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டது. நீண்ட நேரம் எரியக்கூடிய மெழுவர்த்தி.. பல வண்ணங்களை கொண்ட மெழுவர்த்தி என தயாரித்து விற்பனை செய்ய.. வியாபாரம் சூடு பிடித்தது. 
 
தாமரை மொட்டுக்குள் விளக்கு எரிவது போல் தயாரித்த மெழுவர்த்தி ஒன்று விற்பனையில் சக்கை போடு போட, சுதாகரித்த நிறுவனம்.. பின்னர் தொடர்ந்து பல வித்தியாசமான மெழுவர்த்திகளை தயாரித்தது.  
 
பல்வேறு தலைவர்கள் போன்று அச்சு வார்த்து மெழுவர்த்தி தயாரிக்கப்பட்டது. அவர்களில் Napoleon, Marie Antoinette, Benjamin Franklin சிலர். 
 
வெறுமனே வடிவு என்பதைத் தாண்டி.. சில ஆரோக்கிய முயற்சிகளையும் மேற்கொண்டது. புகை விடாத மெழுவர்த்தி அதில் முக்கிய முயற்சி..
 
நாங்கள் சொல்வதை விட, நீங்களே அவர்களின் கடைக்குச் சென்று ஒரு நோட்டம் விட்டு பாருங்களேன். பரிஸ் 4'ல் 11 rue Sainte Croix de la Bretonnerie எனும் முகவரியில் ஒரு காட்சியறையும், பரிஸ் 6'ல் 78 rue de Seine எனும் முகவரியில் ஒரு காட்சியறையும் உண்டு. 
 
ஒரு 'கேண்டில் லைட் டின்னர்' வீட்டில் வைத்து வாழ்வை கொண்டாடலாம் வாருங்கள்!! 
 
(குறிப்பு.. மேலே புகைப்படத்தில் இருப்பதும் மெழுகுவர்த்தி தான்)

வர்த்தக‌ விளம்பரங்கள்