Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்... பிரான்சுக்கு எப்போது..? விலை என்ன..??

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்... பிரான்சுக்கு எப்போது..? விலை என்ன..??

19 மாசி 2025 புதன் 16:40 | பார்வைகள் : 4540


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் ஒன்றை சற்று முன்னர் அறிமுகப்படுத்தியுள்ளது. iPhone 16E என பெயரிடப்பட்ட இந்த தொலைபேசி குறைந்தவிலை ஐபோனாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

iPhone SE 2022 தொலைபேசிகள் ஐரோப்பாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் Type C மின்னேற்றி உள்ள தொலைபேசிகள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பதால், அதன் மாற்றீடாக இந்த 2025 ஆம் ஆண்டு iPhone 16E இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை திகதி,.....

இதன் ஆரம்ப விலை €719 யூரோக்களில் இருந்து ஆரம்பிக்கிறது. 128 சேமிப்பகம் கொண்ட தொலைபேசியாகவும், ஒரு பின்பக்க கமரா கொண்டதாகவும், 6.1 அகல திரை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

SE தொலைபேசிகளில் உள்ள TouchID இனை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக முகத்தினை வைத்து பாதுகாக்கப்படும் FaceID கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் பெப்ரவரி 28 ஆம் திகதி இந்த தொலைபேசி உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் எனவும், பிரான்சில் அன்றைய திகதியிலேயே முன்பதிவு மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்