Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை - ஐரோப்பிய தலைவர்கள் அடுத்தவாரம் விசேட சந்திப்பு

அமெரிக்க ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை - ஐரோப்பிய தலைவர்கள் அடுத்தவாரம் விசேட சந்திப்பு

16 மாசி 2025 ஞாயிறு 12:29 | பார்வைகள் : 4412


ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றசூழ்நிலையில் ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது.

பிரான்ஸ் தலைநகரி;ல் இடம்பெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உட்பட பல ஐரோப்பிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐரோப்பாவின்தேசிய பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முறை தருணம் இதுவென தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் நேட்டோவில் ஐரோப்பா முக்கிய இடத்தை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கான சமாதானம் குறித்து ஐக்கியமான அணுகுமுறையை உருவாக்குவதற்காக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைப்பதே தனது பணி என பிரிட்டிஸ் பிரதமர் கருதுகின்றார்.

ஐரோப்பிய தலைவர்களுடன் தான் ஆராய்ந்த விடயங்கள் குறித்து பிரிட்டிஸ் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பார்.

இந்த மாத இறுதியில் பிரிட்டிஸ் பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வோசிங்டனிலிருந்து திரும்பியதும் உக்ரைன் ஜனாதிபதி உட்பட ஐரோப்பிய தலைவர்களை பிரிட்டிஸ் பிரதமர் சந்திக்கவுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்