Gaîté Lyrique : அகதிகள் உடனடியாக வெளியேற பணிப்பு!!
13 மாசி 2025 வியாழன் 19:25 | பார்வைகள் : 9500
Gaîté Lyrique அரங்கில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள அகதிகளை, உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Gaîté Lyrique அரங்கில் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 300 வரையான அகதிகள் அத்துமீறி நுழைந்து அங்கு தங்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற பலமுறை முயன்றும் முடியாமல் போயுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு பரிஸ் இடைக்கால நீதிமன்றத்துக்குச் சென்றது.
அதை அடுத்து, அவர்கள் அடுத்த ஒருமாத காலத்துக்குள் வெளியேற்றப்படவேண்டும் என நிதிமன்றம் தீர்ப்பளித்தது.
குறித்த கட்டிடத்தில் அகதிகள் தங்கியிருப்பது, சுகாதார ரீதியில் பாதிப்பதை ஏற்படுத்தும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan