Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!

2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!

15 கார்த்திகை 2017 புதன் 13:30 | பார்வைகள் : 25090


கலவரம் கொலைக்களமாக மாறியது. அரசு நீடித்த அவசரகாலச் சட்டத்தினாலும்.. கலவரக்காரர்களின் அட்டூழியத்தினாலும் பொதுமக்கள் இரவில் வெளியில் வர தயங்கினார்கள்.
 
கலவரத்தில் முதல் பலி 34 வயதுடைய Salah Gaham என்பவர். Cassin (Besançon) பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணி புரிந்தவர் Salah Gaham. அன்று நவம்பர் 2 ம் திகதி 2005 ஆம் ஆண்டு, இரவு, குறித்த நிறுவனத்தில் இரவு பணியை மேற்கொண்டிருக்கும் போது.. நிறுவனத்தின் வாயிலில் நின்றுகொண்டிருந்த மகிழுந்தை கலவரக்காரர்கள் எரியூட்டினார்கள். தீயணைப்பு படையினருக்கு Salah Gaham அறிவித்துவிட்டு, தானே குறித்த மகிழுந்தின் தீயை அணைக்க முற்பட்டார்... ஆனா எதிர்பாரா விதமாக தீயினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி மகிழுந்தின் மேல் விழுந்து உடல் கருகி இறக்கிறார். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் திருமணம் செய்திருந்தார்...
 
Epinay-sur-Seine இல் இடம்பெற்ற கலவரத்தில் 56 வயதுடைய Jean-Claude Irvoas கொல்லப்பட்டார். புகைப்படக் கலைஞராக இவர்... கலவரத்தை புகைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கும் போது கட்டையால் அடித்துள்ளதாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. 61 வயதுடைய Jean-Jacques Le Chenadec, 22 வயதுடைய Salaheddine Alloul ஆகியோரும் கொல்லப்பட்டிருந்தனர். 
 
கொல்லப்பட்டவர்கள் பட்டியல் இவ்வாறு இருக்க.. அடுத்த சில நாட்களில் இந்த கலவரம் முடிவுக்கு வந்தது. காவல்துறையினரின் அயராத கண்காணிப்பும் அதிரடி நடவடிக்கையும் இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. கலவரத்தின் முடிவில் மொத்தமாக 2,888 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
25,000 பேர் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். 11,000 காவல்துறையினர் களத்தில் இறங்கி கலவரத்தை அடக்கினார்கள். 
 
மூன்று இளைஞர்களை காவல்துறையினர் துரத்தியதும்... அவர்களில் இருவர் மின்சார வழங்கியில் சிக்குண்டு இறந்ததுமே இந்த கலவரத்துக்கான பொறி. ஆனால் இதற்காக இத்தனை பெரிய வன்முறை வேண்டுமா? 
 
BBC பிறிதொரு காரணத்தைச் சொன்னது.. - நாளை!!

வர்த்தக‌ விளம்பரங்கள்