ஆரம்பமே இலங்கை அணிக்கு அதிர்ச்சி…! அவுஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டி

12 மாசி 2025 புதன் 05:48 | பார்வைகள் : 3582
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் கொழும்பில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர். முதல் ஓவரை ஸ்பென்சர் ஜான்சன் வீச, நிசங்கா 3வது பந்தில் பவுண்டரி விரட்டினார்.
ஆனால், அந்த ஓவரின் 5வது பந்தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து இரண்டாவது ஓவரை ஆரோன் ஹார்டி வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்டமிழந்தார்.
முதல் இரண்டு ஓவர்களிலேயே இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வந்த குசால் மெண்டிஸ் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹார்டி ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025