Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

2005 பிரெஞ்சு கலவரம்! - la conclusion!!

2005 பிரெஞ்சு கலவரம்! - la conclusion!!

16 கார்த்திகை 2017 வியாழன் 11:30 | பார்வைகள் : 23502


நவம்பர் 16, 2005, இன்றைய நாளில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிட்டத்தட்ட 20 நாட்கள் அரங்கேறிய வன்முறையின் சேதக்கணக்கு மலைபோன்றது. மகிழுந்துகள், பேரூந்துகள் உள்ளிட்ட எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சூறையாடப்பட்டிருந்தன. 
 
நீண்ட காலமாக இந்த வன்முறையின் விசாரணைகள் தொடர்ந்தன. மொத்தமாக 2,888 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். உலகத்தொலைக்காட்சியான BBC  ஒரு ஆவணப்படம் வெளியிட்டது. அதில் 'நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம்!' இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் என சொன்னது. இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருப்பதும்.. அரசின் மேல் வெறுப்பில் இருப்பதும் மிக முக்கியமான காரணம் என BBC சொன்னது. 
 
நீண்ட நாட்களின் பின்னர், இந்த கலவரத்தில் 200 மில்லியன் யூரோக்கள் சேதமடைந்துள்ளன என பட்டியலிடப்பட்டது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மொத்தமாக 126 பேர்கள் காயமடைந்திருந்தனர். தவிர, 276 நகரங்களில் வன்முறை வெறியாட்டம் இடம்பெற்றது. 
 
அதிகபட்சமாக நவம்பர் 7 ஆம் திகதி இரவு, நாடு முழுவதும் 395 பேர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
சம்பவம் இடம்பெற்று 10 வருடங்கள் கழித்து, 2015 ஆம் ஆண்டு, இரு காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர். 
 
இதில் சுவாரஷ்யமாக, பல பிரெஞ்சு ராப் பாடகர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. காரணம் 'அடிடா அவள.. உதைடா அவள..' வகையறா வன்முறையை தூண்டு பாடல்கள் இந்த சம்பவத்துக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டது. 
 
இதுபோன்ற ஒரு 'காரணமில்லா' கவலவரத்தை பிரெஞ்சு அரசு முன் எப்போதும் சந்தித்ததில்லை. இதுபோன்ற ஒரு வன்முறை பின் எப்போதும் இடம்பெறாமல் இருக்க அரசு விழிப்புடன் இருக்கின்றது. 
 
முற்றும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்