Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் தொடர் தாக்குதல் ...!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் தொடர் தாக்குதல் ...!

11 மாசி 2025 செவ்வாய் 15:10 | பார்வைகள் : 5134


உக்ரைனில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் உயிரிழப்புகள் மற்றும் மின்சார கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்த வகையில்,  சமீபத்தில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து இருப்பதாக  டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஹி லிசாக் தெரிவித்துள்ளார்.

நிகோபோல்(Nikopol) நகரில் 18 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.

அதேபோல், மர்கனெட்ஸ் நகரில் இரண்டு முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள், போரின் தீவிர தன்மையையும், பொதுமக்கள் உயிர்களுக்கு இருக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலையும் எடுத்துக்காட்டுகின்றன.

உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்சென்கோ, ரஷ்ய படைகள் உக்ரைனின் எரிவாயு கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் பெரும் சேதம் மற்றும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்